தமிழகத்துக்கு கூடுதலாக ஊர்க்காவல் படையினர் வருகை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு
சென்னை : வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக ஊர்காவல் படைகள் வரவிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு அவர்கள் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு கடந்த புதன்கிழமை அளித்த பேட்டி, தமிழகத்துக்கு தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் பல்வேறு மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேவை அடிப்படையில் பல்வேறு தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளனர். குறிப்பாக பதற்றமான மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் இவர்கள் அதிக அளவில் பணிகளுக்கு தலா 7 கம்பெனிகளும், அடுத்ததாக தேனி, தூத்துக்குடி,கன்னியா குமரி, தஞ்சாவூருக்கு தலா ஆறு கம்பெனிகளும் திருநெல்வேலி,விருதுநகர், திருப்பூர் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஐந்து கம்பெனிகளும் பிரித்து அனுப்பப்பட உள்ளன. தமிழக காவல்துறையின் அனைத்து படை பிரிவினர் ஊர் காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர், இதில் ஊர்க்காவல் படையினர் போதிய அளவில் தமிழகத்தில் இல்லாத நிலையில் காவல்துறையின் மூலம் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட உள்ளனர். என்று அவர் தெரிவித்தார்.