ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம், கீழக்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட, கீழக்கரை 500 ப்ளாட் தெரு மற்றும் அதனருகில் சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதாக கீழக்கரை காவல்துறையினர் மற்றும் தனிப்பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் மேற்படி இடத்திற்கு சென்று அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த முகம்மது நசுருதீன் மற்றும் அகமது அசாருதீன் ஆகிய சகோதரர்களை விசாரித்து அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் அவர்களின் வீட்டிலிருந்து 31 மூட்டை பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் (724 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி நபர்கள் மற்றும் கடல் அட்டை மூட்டைகள் வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு, கீழக்கரை வனத்துறையினரால் WLOR 5/24-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.