எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பிரேதம் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்குளம் நெம்மேனி அருகே உடையனை கண்மாய்கரை அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பிரேதம் கிடப்பதாக 18.05.2022 அன்று நெம்மேனி கிராம நிர்வாக அலுவலர் திருமதி.சுகந்தி அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் குற்ற எண்: 120/22, U/s. 174 CrPC Suspicious Death வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர் திரு.M.துரை, இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சிபிசாய் சௌந்தரியன் அவர்கள் மேற்பார்வையில் சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் திரு.மணிகண்டன், சார்பு ஆய்வாளர்கள் திரு.ஹரிக்கிருஷ்ணன், திரு.பிரதாப் மற்றும் திரு.உதயக்குமார் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிவகங்கை நகர் வாணியங்குடியில் A1 ரமேஷ் என்பவர் சோழன் பிரிக்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் A1 ரமேஷ் மைத்துனர் A3 செந்தில் மூலம் கிருஷ்ணாசிங் 33, த.பெ. (லேட்) பிமல்சிங், தானே பகாலியா, ரோஹ்வான் போஸ்ட், சௌரா கிராமம், ருட்வன் மாவட்டம், பீகார் மாநிலம்; மற்றும் சரத் ஆகிய இரண்டு வெளிமாநிலத்தவர்களை கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து உள்ளார். கடந்த 15.05.22-ம் தேதி வெளிமாநிலத்தவர்களிடம் A2 நித்திஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை பொருட்கள் வாங்குவதற்கு கொடுத்து உள்ளார். அன்று மதியம் வெளிமாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணாசிங் மற்றும் சரத் ஆகிய இரண்டு நபர்களும் குடிபோதையில் சிவகங்கை அம்பேத்கார் சிலை அருகே தடுமாறி கீழே விழுந்ததில் சிறிய காயத்துடன் கிடந்தவர்களையும், சேதமடைந்த வண்டியையும் A4 சக்திவேல் என்பவர் அழைத்துக் கொண்டு கம்பெனிக்கு கூட்டிச்சென்று விட்டுவிட்டு நித்திஷ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். முன்பு ரமேஷ் கம்பெனியில் மோல்டு பிளானிட்டை கிருஷ்ணாசிங் மற்றும் சரத் திருடி விற்றது சம்மந்தமாக கண்டித்து வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 15.05.22-ம் தேதி அன்று இரவு 21.00 மணியளவில் A1.ரமேஷ் 36, த.பெ.ராமு, கோகுலைகால் தெரு, சிவகங்கை (அகமுடையார்) சோழன் பிரிக்ஸ் உரிமையாளர் (சிமெண்ட் செங்கல்), A2. நித்திஷ் (எ) ரித்தீஷ் 37, த.பெ. நாகராஜ், பங்களா தெரு , சிவகங்கை (மறவர), A3. செந்தில்குமார் 45, த.பெ.பாண்டி, கீழக்குளம் (இ) காந்தி வீதி, சிவகங்கை (அகமுடையார்), A4. சக்தி வேல் 29, த.பெ. ராமையா, முதல் தெரு நேரு பஜார், ராயல் மஹால் எதிர்ப்புறம், சிவகங்கை (வலையர்), A5. கோபி ; கோபி கிருஷ்ணன் 31, த.பெ. சோமைய்யா, சீனிவாசா நகர், தொண்டி ரோடு சிவகங்கை (மறவர்), A6. மோகன்ராஜ் 37, த.பெ. அழகர்சாமி, சம்பந்தர் தெரு, சிவகங்கை (தெலுங்கு செட்டியார்), A7. வெங்கடேஷ் 31, த.பெ. தென்னரசு, ஏனாபுரம் (இ) முத்துநகர்,சிவகங்கை (அகமுடையார்), A8. யாசின் 39, த.பெ. ரஹீம், சாக்கலா தெரு, சிவகங்கை (முஸ்லிம் லெப்பை), A9.தவமணி 55, காளவாசல், சிவகங்கை (இந்து வண்ணார்) ஆகியோர் கம்பெனிக்கு சென்று இருசக்கர வாகனம் சேதமடைந்தது மற்றும் பிளானட்டை திருடியது சம்பந்தமாக கிருஷ்ணாசிங் மற்றும் சரத் ஆகிய இருவரிடம் கேட்டு எதிரிகள் அனைவரும் ஒள்று சேர்ந்து கிருஷ்ணாசிங் மற்றும் சரத் ஆகிய இருவரையும் கை, கட்டையால் அடித்துள்ளனர். அதில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த் சரத் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
காயம்பட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணாசிங்கை கட்டிப்போட்டுவிட்டு எதிரிகள் அனைவரும் வீட்டடிற்கு சென்றுவிட்டனர். மீண்டும் அடுத்த நாள் அதிகாலையில் A3 செந்தில்குமார் வந்து பார்க்கும் பொழுது கிருஷ்ணாசிங் இறந்து கிடந்துள்ளார். A3 செந்தில் மைத்துனர் A1 ரமேஷ்க்கு தகவல் சொல்லியுள்ளார். A1ரமேஷ் A2 நித்திஷ் (எ) ரித்தீஷ்க்கு தகவல் கொடுத்து, மூவரும் சேர்ந்து பொலிரோ பிக்கப் வாகனத்தில் இறந்த கிருஷ்ணாசிங் என்பவரின் பிரேதத்தை போர்வையால் மூடி ஏற்றிக்கொண்டு சாமியார்பட்டி ரோட்டிற்கு சென்று கீழக்குளம் நெம்மேனி அருகே உள்ள உடையனை கண்மாய்கரை அருகே எதிரி A9 தவமணி என்பவருடன் சேர்ந்து 16.05.22-ம் தேதி காலை சுமார் 08.30 மணியளவில் டீசலை ஊற்றி கிருஷ்ணாசிங் பிரேதத்தை எரித்துள்ளனர். பின்பு மீண்டும் 17.05.22-ம் தேதி அதிகாலை 05.00 மணியளவில் A1ரமேஷ் மற்றும் A2 நித்திஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை வாங்கி சென்று பாதி எரிந்த நிலையில் இருந்த பிரேதத்தை மீண்டும் எரித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக எதிரிகள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.