கொலை, கொள்ளை போன்ற பெருங்குற்றங்களில் ஈடுபடும் ரவுகளுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே நேற்று ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நேரத்தில் அவரது தலைமையிலான பெஞ்ச் ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல தாதா அருண்யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவர்கள் விசாரித்தனர். அவருக்கு அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டனர். அப்போழுது தலைமை நீதிபதி பாப்டே கூறியதாவது. பிரபலமாக திகழும் ரவுடிக் கும்பல்கள், கூலிப்படையினர், கொடூரக் குற்றவாளிகள் தொடர்ந்து கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது ஜெயிலுக்கு பதில் ஜாமீன் என்ற கொள்கைகளை இதில் பயன்படுத்துதல் கூடாது. இத்தகைய குற்றவாளிகளை ஜாமீனில் விட்டால் அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை மிரட்டுவதுடன் சாட்சிகளையும் கலைப்பார்கள், இந்த குற்றவாளியின் மீது 15 கொலை, மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவரை எப்படி ஜாமீனில் வெளியே விட முடியும் உத்திரப்பிரதேசத்தில் பிரபல ரவுடி ஒருவன் மீது 64 கிரிமினல் வழக்குகள் இருந்த நிலையில் அவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருந்தான். அவன் கடைசியாக 8 போலீஸ்காரர்களை கொலை செய்தான் அவனுக்கு எப்படி ஜாமீன் வழங்கப்பட்டது இது போன்று அச்சுறுத்தல் தருபவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பதை அனைத்து ஐகோர்ட்டுகளும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.