Police Department News

3 முதல் 4 நிமிடங்கள்தான்!’ – அவசர அழைப்புகளுக்கான ரெஸ்பான்சில் கோவை போலீஸ்டாப்’அவசர

3 முதல் 4 நிமிடங்கள்தான்!' - அவசர அழைப்புகளுக்கான ரெஸ்பான்சில் கோவை போலீஸ்டாப்’அவசர அழைப்புகளைத் தொடர்ந்து 3 முதல் 4 நிமிடங்களில் சம்பவ இடத்தில் கோவை போலீஸார் ஆஜராகி விடுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் ஷரன் தெரிவித்தார்.
அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் கோவை மாநகரக் காவல்துறை விரைந்து சிறப்பாக செயல்பட்டிருப்பதாக மாநில காவல் கட்டுப்பாடு மையம் பாராட்டு தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தர மதிப்பீட்டில், கோவை மாநகர காவல்துறைக்கு 5-க்கு 4.6 என்ற மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. கோவை மாநகர காவல்துறை ஆபத்து காலத்தில் விரைந்து செயல்புரியும் திறனுக்குமே இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவசர உதவி எண்ணான 100-க்கு அழைக்கப்படும் அழைப்புகள் சென்னையில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இணைக்கப்படும். பின்னர், பதிவு செய்யப்பட்ட அந்தக் குரல் அழைப்பை, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அதன்பின்தான், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு அந்தத் தகவல் வாக்கி – டாக்கி மூலமாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தை நெருங்கியதுமே, ரோந்து காவலர்கள் அதுதொடர்பாக அறிக்கை ஒன்றை மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்துகிறார்கள். இந்தநிலையில், தமிழக அளவில் அவசர உதவிகளுக்கு சம்பவ இடத்துக்கு விரைந்து செல்வதில் கோவை மாநகரக் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது.இதுகுறித்து கோவை மாநகரக் காவல் ஆணையர் சுமித் ஷரன் கூறுகையில், “கோவை மாநகரைப் பொறுத்த அளவில், கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் கிடைத்த 3 முதல் 4 நிமிடங்களுக்குள் ரோந்து காவலர்கள் சம்பவ இடத்தை அடைந்துவிடுவார்கள். இதைவிட விரைவாக மக்களை அணுகுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். புதிதாக 12 ரோந்து வாகனங்கள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.தற்போதைய கணக்கின்படி கோவை மாநகரில் 44 இருசக்கர மற்றும் 24 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் உள்ளன. ரோந்து பணியை அதிகரிக்கும் நோக்கில் கூடுதலாக 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 ஜீப்புகள் வாங்க வலியுறுத்தி இருக்கிறோம். வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நவீன கட்டுப்பாட்டு அறையில் இருந்தே அவற்றின்ன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். இதுவே ஆபத்து காலத்தில், அருகிலுள்ள ரோந்து வாகனத்தை தொடர்புகொண்டு விரைவாக பணிசெய்ய உதவுகிறது. இதனால் தான் 4.6 என்ற மதிப்பீட்டை கோவை மாநகரக் காவல்துறை பெற்றிருக்கிறது” என்றார்.
பொலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.