




குற்றத்தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பற்றியும் காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவு பற்றியும் மதுரை தெற்கு வாசல் போலிசாரின் கலந்தாயிவு கூட்டம்
மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அக்.5 நண்பகலில் தெற்கு வாசல் காவல் நிலையம் சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தெற்கு வாசல் சரக பகுதியில் வசிக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பார்த்திபன் மற்றும் ரெஜினா ஆகியோர் சிசிடிவி கேமரா அமைப்பது, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதி கருத்துகளை தெரிவித்தனர்.
