திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு CCTV கேமராக்கள்
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களது மேலான உத்தரவின்படி, வருகின்ற “தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக தேவையான காவல் ஆளினர்களை நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள், CCTV கேமராக்கள், Drone கேமரா மற்றும் பொது விளம்பரங்கள் மூலமாக குற்றசம்பவங்கள் தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாவண்ணம் பண்டிகையை பொதுமக்கள் நல்ல முறையில் கொண்டாடவேண்டி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.