மதுரை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த கஞ்சா, இரண்டு பேருக்கு சிறை
திருவாதவூர் பூவந்தி ரோடு இடையே ஒரு குவாரியில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 108 கிலோ கஞ்சாவை மதுரை போதை பொருள் நுண்ணறிவு போலீசார் 2015ல் பறிமுதல் செய்தனர்.
திருவாதவூர் விஜயகுமார் வயது 35 பேரையூர் அருகே காளப்பன்பட்டி காசிமாயன் வயது 45, மீது வழக்கு பதிந்தனர். இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து போதைப்பொருள் தடுப்பு நீதி மன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.