ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் பறிமுதல்*
இராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கு அருகே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கேணிக்கரை சார்பு ஆய்வாளர் திரு.தங்கஈஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த முகமது ஹாரிஸ் மற்றும் ஜெகதீசன் ஆகியோரை விசாரணை செய்ததில் அவர்களிடம் 100 கிராம் மெத்தம்பெட்மைன் எனும் போதைப்பொருள் வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் இருவரையும் கேணிக்கரை காவல் சார்பு ஆய்வாளர் அவர்கள் கைது செய்தார்கள். இதனைத் தொடர்ந்து முகமது ஹாரிஸ் அவரது வீட்டில் விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைத்திருந்த 200 கிராம் மெத்தம்பெட்மைன் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருட்கள் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், 6 அலைப்பேசி மற்றும் பணம் ரூபாய் 45000/-பறிமுதல் செய்யப்பட்டது.