ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் இரவு நேர ரோந்து பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகத் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களின் சொந்த ஊரில் அவரது மனைவி மற்றும் பெற்றோரை நேரில் சந்தித்து ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.