
வந்திதா பாண்டே மத்திய இளைஞர் விவகார அமைச்சக இயக்குநராக நியமனம் – உடனடி மாநில அரசு பதவியில் இருந்து விடுவிப்பு.
மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்துள்ளதாகவும், உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும்வரை மத்திய அரசின் பதவியில் அவர் தொடர்வார் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வந்திதா பாண்டேவின் கணவரும் திருச்சி சரக டிஐஜியுமான வருண்குமார், திருச்சி காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது நாம் தமிழர் கட்சியினரிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனது குடும்பத்தினர் குறித்து இணையத்தில் தவறான கருத்துகளை நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் வெளியிடுவதாக வருண்குமார் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, இருவருக்கும் டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு பணிக்கு வந்திதா பாண்டே விண்ணப்பித்திருந்தார்.
அவரின் விண்ணப்பத்தை ஏற்று, அவரை மத்திய அரசின் பணிக்கு உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது.
