
தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையாளர்
தமிழ்நாடு காவல்துறையினருக்கான 2025-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கிசுடும் போட்டிகள் 24.07.2025 முதல் 26.07.2025 வரை காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டிவாக்கம் பகுதியில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல துப்பாக்கி சுடும் ஆண்கள் அணி தங்கம்-4, வெண்கலம்-2, வெள்ளி-2 பதக்கங்களும் மொத்தம் 8 பதக்கங்கள் மற்றும் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் 2,3 ஆம் இடத்திற்கான 2 கேடயங்களை பெற்றுள்ளது. இன்று தென்மண்டல துப்பாக்கி சுடும் பிரிவில், மதுரை மாநகர காவல் சார்பாக பங்கேற்ற காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
