


தீவிர கஞ்சா வேட்டை சிக்கிய 27 கிலோ கஞ்சா (தாம்பரம் மாநகர காவல்)
பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 15.02.2025 ம் தேதி சுமார் 07.15 மணி அளவில் கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதான மண்டபத்திற்கு எதிரே வைத்து 1, திரு.ராகுல் வ/24 த/பெ சிந்தூர் பாண்டியன்.எண் 3/43 மறவர் தெரு பெருநாழி, ராமநாதபுரம் மாவட்டம் 2, முகிலன் வ/24 த/பெ முனியாண்டி,, எண் 3/538. பொன்னையாபுரம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் 3,சேது ராமச்சந்திரன் வ/24 த/பெ இளங்கோவன்.எண் 1/5 கள்ளிகுளம், கமுதி, ராமநாதபுரம் மாவட்டம் என்பவர்களை சோதனை செய்ததில் தலா ஒருவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா என மொத்தம் 24 கிலோ கஞ்சா மற்றும் ரெண்டு கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த கஞ்சாவினை அவர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து வாங்கி வந்து ராமநாதபுரம் கொண்டு சென்று அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு சில்லறை விற்பனைக்கு எடுத்து செல்வதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் Cr.no 11 /2025,u/s 8 (c) ,20( b),(C)29(1),NDPS Act-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அதே போல் இன்று 15.02.2025 ம் தேதி காலை சுமார் 09.45 மணி அளவில் அனக்காபுத்தூர் சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பார்சுலுடன் நின்னிருந்த இருவரை விசாரணை செய்ததில் அவர்கள் பெயர் 1, பரத்குமார் வ/23,த/பெ குபேரன், எண் 26 இயேசுநாதர் தெரு, கலைவாணர் நகர், பாடி சென்னை -50 மற்றும் 2)பாபு வ/26 த/பெ ஜான் பாஷா எண் 22, முனீஸ்வரன் தெரு கலைவாணர் நகர், பாடி, சென்னை-50 என்றும், அவர்கள் வைத்திருந்த பையனை சோதனை செய்து பார்த்ததில் அதில் சுமார் 03 கிலோ கஞ்சா இருந்தது அதனை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து சென்னையில் உள்ள ஐடி ஊழியர்களுக்கும் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கும் விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டனர். எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களும் இருந்த 3 கிலோ கஞ்சா எடை இயந்திரம்-1 மற்றும் 2 கைபேசிகள் ஆகியவற்றை போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. இது சம்பந்தமாக T4 சங்கர் நகர் காவல் நிலையம் குற்ற எண் 107/2025 U/s 8(c) ,20(b),NDPS ACT -ன் படி வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேற்படி 2 வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட 5 நபர்களையும் சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர்கள் முன்பு ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாநிலத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை போலீசார் கடுமையாக ஒடுக்கி வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் தாம்பரம் மாநகர காவல் துறை தொடர்ந்து சட்ட விரோத செயல் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருவது தொடரும்.
