Police Department News

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலை மற்றும் கடத்தல்காரர்களை கைது செய்த போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலை மற்றும் கடத்தல்காரர்களை கைது செய்த போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

விழுப்புரம் மாவட்ட
அரகண்ட நல்லூர் காவல் நிலையம் 440 Kg புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த வழக்கில் தனிப்படை காவலர்கள், பெண் பாராக்காவலர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனத்தை தணிக்கையில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்களை கைப்பற்ற வாகனத்தை நிறுத்திய போது குட்கா கடத்தி வந்த வாகனம் பேரிகாடில் இடித்துவிட்டு வந்த திசையில் திரும்பி அரகண்டநல்லூர் காவல் நிலையம் வழியாக செல்ல முற்பட்டபோது தனிப்படையினர் அரகண்டநல்லூர் காவல் நிலைய பாரா காவலர் திருமதி.ரேணுகா அவர்களுக்கு தகவல் தெரிவித்த உடன் திருமதி.ரேணுகா அவர்கள் காவல் நிலையம் வெளியே வந்து ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் பேரிகார்டு வைத்து வாகனங்களை தடுத்து நிறுத்திய உடன் தனிப்படையினர் பின் தொடர்ந்து வந்து குட்கா கடத்திய வாகனத்தை மடக்கி பிடித்தனர்.

440 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்டதை தொடர்ந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுஅவர்களிடம் இருந்து மேற்கண்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு எதிரிகளை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்ய உதவிய தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர்
திரு.லியோ சார்லஸ், தலைமை காவலர்கள் திரு.மகாராஜா மற்றும் திரு.பாலமுருகன், முதல் நிலை காவலர்கள்
திரு.குமரகுருபரன்,
திரு.நீலமேகம்
திரு.சத்தியம், காவலர் திரு.அருள், பாராக்காவலர் திருமதி.ரேணுகா, ஆட்டோ ஓட்டுநர் திரு.அர்ஜுன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.