Police Department News

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற டிப்பர் லாரியை தடுத்து கைப்பற்றப்பட்டது. மறைமலைநகர் காவல்துறையினர் செய்த நற்பணிக்கு காவல்துறை இயக்குனர் அவர்களின் பாராட்டு[

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற டிப்பர் லாரியை தடுத்து கைப்பற்றப்பட்டது. மறைமலைநகர் காவல்துறையினர் செய்த நற்பணிக்கு காவல்துறை இயக்குனர் அவர்களின் பாராட்டு
[

கடந்த இருபதாம் தேதி அன்று காலை 10. 15 மணி அளவில் டி9 மறைமலை நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு லோகேஷ் காந்தி மற்றும் காவலர் மோகன்ராஜ் ஆகியோர் மஹிந்திரா சிட்டி ஜி எஸ் டி சாலை சந்திப்பில் வழக்கமான போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போது பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து டாரஸ் டிப்பர் லாரி எந்த போக்குவரத்து சிக்னலையும் பின்பற்றாமல் பலமுறை எச்சரித்தும் நிறுத்தாமல் செல்வதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது காவலர்கள் அந்த லாரியை நிறுத்த முயன்ற போது அது நிற்காததால் அந்த சமயத்தில் மறைமலைநகர் போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமுருகன் லாரியை தடுப்புகள் வைத்து நிறுத்த முயன்றதால் லாரி வேகம் குறைந்தது உடனடியாக அவர் லாரியின் படியில் ஏறி உள்ளார் ஆனால் லாரி நிற்காமல் வேகமாக ஓடியதால் அவர் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் படியில் பயணித்துள்ளார் லாரி ஜூனியர் குப்பண்ணா சந்திப்பை நெருங்கும்போது அது ஒரு தடுப்பில் மோதி நின்றுள்ளது பொதுமக்களின் உதவியுடன் லாரியை ஒட்டிய நபரை பிடிக்க சார்பு ஆய்வாளர் இயன்ற போது லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சார்பு ஆய்வாளர் மற்றும் பொதுமக்களை அந்த ஓட்டுநர் மிரட்டியுள்ளார் இருப்பினும் அவரை பிடித்து டி9 மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்

விசாரணையில் பரனூர் சுங்கச்சாவடியில் இந்த லாரியை நிறுத்தி விட்டு ஓட்டுநர் இறங்கி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவர் லாரியில் ஏறி வேகமாக எடுத்துச் சென்றது தெரிய வந்தது பின்னர் அவர் திருநெல்வேலி சேர்ந்த சுபாஷ் வயது 35 என அடையாளம் காணப்பட்டது மேற்படி சுபாஷ் மனநிலை சரியில்லாதவர் என தெரியவந்தது இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாஷை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்

திருமுருகன் சிறப்பு சார் ஆய்வாளர், திரு. லோகேஷ் காந்தி சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர் மோகன்ராஜ் ஆகியோர் விரைவாக செயல்பட்டு அதிவேகமாக சென்ற லாரியை நிறுத்தியுள்ளனர் இந்த காவல் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால்சாலையில் பல விலை மதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப., அவர்கள் மேற்கண்ட காவலர்களின் விரைவான மற்றும் அர்ப்பணிப்பு மிக்க செயலைப் பாராட்டி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.