குழந்தைகள் நலம் பேணும் காவல் நிலையத்தில்
விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் விழா
காஞ்சிபுரம் மாவட்ட சைல்டுலைன் 1098 மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள குழந்தைகள் நட்பு மையத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.பொன்ராம், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா பொது மேலாளர் திரு.பிரேம் ஆனந்த் ஆகியோர் இணைந்து விளையாட்டுப் பொருட்களை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் செல்வி, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைமை காவலர் பிரபாவதி ஆகியோரிடம் வழங்கினர். பின்னர் சைல்டுலைன் 1098 விழிப்புணர்வு கைப்பையினை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.பொன்ராம் வெளியிட, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் பிரேம் ஆனந்த் பெற்றுக் கொண்டார். மேலும் இந்நிகழ்வில், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் மோகனவேல், சைல்டுலைன் 1098 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபாபரன், ஆவண அலுவலர்கள் விஜயகுமார் மற்றும் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
காஞ்சிபுரம்
மாவட்ட நிருபர் ம.சசி