Police Department News

மதுரை ரயில் நிலையத்தில் சென்னை செல்ல பயணச்சீட்டு பெற்றிருந்த காலில் அடிபட்ட பயணிக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவி

மதுரை ரயில் நிலையத்தில் சென்னை செல்ல பயணச்சீட்டு பெற்றிருந்த காலில் அடிபட்ட பயணிக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மீன் கடை தெருவை சேர்ந்த முத்துஇருளன் மகன் மாரிக்கண்ணு வயது 63, இவர் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக பயணச்சீட்டு பெற்றிருந்தார் இவர் தன் மனைவியுடன் நான்காவது பிளாட்பாரத்தில் சுமார் 6.40 மணியளவில் நடந்து செல்லும் சமயம் கால் இடறி கீழே விழுந்ததில் அவரது கால் மூட்டில் அடிபட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டார் அப்பொழுது பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் செல்லா சுப்பிரமணியன் மற்றும் காவலர் இளமாறன் ஆகியோர் உடனே பேட்டரி வண்டியை வரவழைத்து அவர்களை மீட்டு வி.ஐ.பி. நுழைவாயிலுக்கு கொண்டு வந்தனர் பிறகு உடனடியாக மதுரை ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களுக்கு தகவல் தெரிவித்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு இரவு 7.10 மணியளவில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை எடுத்து வருகிறார் சென்னை செல்வதற்காக பயனை சீட்டு எடுத்திருந்த இவரால் சென்னை செல்ல இயலவில்லை.

Leave a Reply

Your email address will not be published.