
மதுரையில் போதைப் பொருளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமான விழிப்புணர்வு.
11.08.25 திங்கள் கிழமையன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் களுக்கு போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹோலி பேமிலி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளை பற்றிய விழிப்புணர்வினை மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ.தங்கமணி அவர்கள் வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயராணி.. மற்றும் ஆசிரியைகள், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் போதைப் பொருளுக்கு எதிராக ஓவிய போட்டி கட்டுரை போட்டி பேச்சு போட்டியில்..சிறந்து விளங்கிய மாணவியர்களுக்கு சான்றிதழையும் பரிசுகளையும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் வழங்கினார்.. இறுதியாக மாணவியர்கள் அனைவரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முன்பாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
