
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விதி மீறி இயக்கிய ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக பலர் புகார் அளித்தனர்
இதையடுத்துது போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்களின் தலைமையில் போக்குவரத்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்
விதி மீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 22 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ., சித்ரா அவர்களிடம் ஒப்படைத்தனர்.
