
பத்திரிகை ஊடகவியலாளர்களுடன் மதிய உணவு அருந்தி நன்றியும் அன்பும் தெரிவித்துப் பிரியா விடைபெற்ற காவல்துறைத் தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால்.

தற்போதைய காவல் துறைத் தலைமை இயக்குனர் திரு சங்கர் ஜிவால் அவர்களின் பணிக்காலம் இந்த ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பத்திரிகை ஊடகவியலாளர்களைக் குறிப்பாக காவல்துறை தொடர்பான செய்தி பத்திரிகை ஊடகவியலாளர்களை நேரில் அழைத்த திரு சங்கர் ஜிவால் அவர்களுடன் மதிய உணவு அருந்தி அன்புடன் விடை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் பணியாற்றியது தமக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைத் தந்ததாகவும் பணிக்காலம் முடிந்த பிறகும் தமிழ்நாட்டில்தான் தாம் தொடர்ந்து தங்க இருப்பதாகவும் திரு சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
பணிக்காலத்தின் போது உடன் களத்தில் பணியாற்றிய பத்திரிக்கை ஊடகவியலாளர்களுடன் நன்றியையும் அன்பையும் பரிமாறிக்கொண்ட திரு சங்கர் ஜிவால் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஒரு காவல்துறைத் தலைமை இயக்குநர் பணி ஓய்வு பெறும் போது பத்திரிக்கை ஊடகவியலாளர்களை அழைத்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி நன்றியைம் அன்பையும் பரிமாறிக் கொண்டது இதுவே முதன்முறை என்
