Police Department News

தாம்பரம் மாநகர காவல் துறையினர் அதிரடி கஞ்சா வேட்டை, 120 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது.

தாம்பரம் மாநகர காவல் துறையினர் அதிரடி கஞ்சா வேட்டை, 120 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது.

தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினருக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் பேரில் 24.08.2025 அன்று 12. 50 மணியளவில், பல்லாவரம், 200 அடி ரேடியல் ரோடு அருகில் வைத்து, 1) Nilachal Palaka A/35, S/o Abhimanyu Palaka, No.42, Chandiliguda Village, M.K.Ray Post, Rayagada District, PS Gudari, Odisha-765026, என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 105 கிலோ கஞ்சா, 1- கைப்பேசி மற்றும் 1- OD 15 J 8558 எண் கொண்ட கஞ்சாவினை கடத்த பயன்படுத்திய 4 சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த கஞ்சாவினை ஒடிசா மாநிலத்தில் இருந்து வாங்கிவந்து பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு வந்ததாக கூறியதை தொடர்ந்து, தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் அந்த நபரை கைது செய்து Cr.no. 140/2025, u/s 8(c), 20(b) (ii) (B) (C)25 NDPS Act., பதிவு செய்து புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

மேற்படி, வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை சம்மந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்படுவார்.

அதேபோல் 23.08.2025 அன்று, பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினருக்கு கிடைத்த நம்பந்தகுந்த தகவலின் அடிப்படையில், 2 வெவ்வேறு இடங்கள், காமாட்சி மருத்துவமணை அருகிலும் மற்றும் கவுரிவாக்கம் பேருந்து நிருத்தம் அருகில் வைத்து 1) Saravanan M/44, S/o Madasamy, No:8590,9 th Block, 4 Adukku Madi, Kannagi Nagar, Chennai-97, 2) Amarendiran @ Amar A/24, S/0 Ramakrishnan, No:26, Gandhipuram, Viyasarpadi, Chennai-39, and 3) Kamalesh, A/26, S/o Ganesan, No.33A, Annai Indira Nagar, Anna Nagar, Chennai-40, 3 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த (10 kgs + 5 kgs) 15 கிலோ கஞ்சா, 1- ஆட்டோ (TN 11 BE 4860) and 3 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள், கஞ்சாவினை ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து, கண்ணகி நகர் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதாக கூறியதை தொடரந்து, பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் அவர்களை கைது செய்து 1) Cr.no.90/2025 u/s 8(c), 20(b)(ii)(B), 25, 29 (1) NDPS Act., & 2) Cr.no.91/2025 u/s 8(c), 20(b)(ii) (B) NDPS Act., செய்து புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 3 நபர்களும் சம்மந்தப்பட்ட குற்றவியல் நடுவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சீறிய நடவடிக்கையில் மொத்தம் 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
.

மேலும், இவ்விதமான போதை பொருள் வர்த்தகத்தை தடுக்கும் முயற்சியில் தாம்பரம் மாநகர காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நடவடிக்கையானது நகரத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், போதைப்பொருள் பிடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியை சிறப்பாக மேற்க்கொள்வதன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.