
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக வதந்தி பரப்பிய நபர் கைது
கடந்த 30. 9. 2025 அன்று இரவு தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக தவறான தகவலை சொன்னதின் பேரில் உடனடியாக வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் துப்பறியும் மோப்ப நாய்கள் மற்றும் மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்கள் வரவழைக்கப்பட்டு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரங்கள் பேருந்து நிறுத்தம் பகுதிகள் ஆட்டோ மற்றும் டூ வீலர் பார்க்கிங் ஏரியாக்கள் மற்றும் பேருந்து உள்ளே வெளியே செல்லும் முகப்பு பகுதிகள் பேருந்து நிலையத்தில் மையப் பகுதிகள் கடைகள் மற்றும் கழிவறைகளை தீவிரமாக சோதனை செய்த போது அது முற்றிலும் தவறான தகவல் என்பதையும் பொதுமக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் வீன் வதந்தியை பரப்பியது தெரிய வந்தது
இந்த நிலையில் மேற்படி வெடிகுண்டு வதந்தியை பரப்பிய நபர் பற்றி தீவிர விசாரணை செய்து சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்து வெடிகுண்டு இருப்பதாக வதந்தியை பரப்பியவர் தூத்துக்குடி மாவட்டம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வரவே அங்கு விரைந்த மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்கள்செல்போனில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தியை பரப்பியவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த செங்கோட்டையன் மகன் வெங்கடாசலம் வயது 44 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்து மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணைக்கு பின் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்
மேற்படி வெடிகுண்டு இருப்பதாக வதந்தியை பரப்பியவரை விரைந்து செயல்பட்ட மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோரை மதுரை மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்
