
1/2
Dt: 07.10.2025
தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.
கடந்த 07.10.2025 அன்று அதிகாலை 10.00 மணியளவில், T-14 பள்ளிக்கரணை, காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், மயிலை பாலாஜி நகர், வேளச்சேரி சாலையில் உள்ள ஜூஸ் வேர்ல்ட் கடை அருகே வாகன சோதனை செய்தபொழுது, TN 07 CL 1674, என்ற பதிவு எண் கொண்ட Suzuki Baleno காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் 300 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 1) சதிஷ், வ/34, த/பெ. சுந்தர்ராஜ், எண். 8/1, காந்தி தெரு, கன்னிகாபுரம், ஆவடி மற்றும் 2) ஜெகதீசன், வ/40, த/பெ செல்வராஜ், எண்.6, ராகுல் காந்தி தெரு, கே.கே. நகர், சென்னை, என்பவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் (TN 07 CL 1674) மற்றும் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புலன் விசாரணையில் அவர்கள் குட்கா பொருட்களை, ஆந்திர மாநிலத்திலிருந்து வாங்கி வந்து, பள்ளிக்கரனை மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
இது சம்மந்தமாக, சதிஷ் மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவர் மீதும், T14, பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் Cr.No. 523/2025, U/s 123 BNS r/w 24 (1) COTPA Act., பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 2 நபர்களும் சம்மந்தப்பட்ட குற்றவியல் நடுவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.
