Police Recruitment

சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று, வண்டலூர், அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமி, குர்ஆன் படிப்பதற்காக பள்ளிவாசலுக்குச் சென்றபோது, எதிரி பாலியல் நோக்கத்துடன் சிறுமியை பள்ளிவாசலின் மாடிக்கு அழைத்துச் சென்று, சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தாக்குதலில் (Aggravated Sexual Assault) ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்படி, பாதிக்க்பபட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், வண்டலூர், அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 30/2017 ச/பி 366, IPC மற்றும் section 10 of the POCSO Act-ன்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டது.

புலன் விசாரணையின்போது, எதிரி சுல்தான் அஹமது, வ/43/2017, த/பெ அப்துல் லத்தீப், என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். புலன்விசாரணை துரிதமாக முடிக்கப்பட்டு மேற்படி எதிரி சுல்தான் அஹமது, மீது செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் 29.06.2018 அன்று, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கானது 15.12.2019 அன்று செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் POCSO சட்டத்தின்படி, குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, Spl. SC. No.160/2019, வழங்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையின் போது 12 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு, 12 சான்று ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய சட்டப்படி நடைமுறைகள் அனைத்தையும் பின்பற்றி, நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றவாளி என தீர்மானித்து கீழ்கண்ட தண்டனையை (05.12.2025) அன்று, வழங்கியுள்ளது.

1) இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366-ன் கீழ்:

7 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1000/- அபராதம் விதிக்கப்ட்டுள்ளத

Leave a Reply

Your email address will not be published.