
மத்திய துணை ராணுவப்படை வீரரை நலம் விசாரித்த மதுரை போலீஸ் கமிஷனர்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்பு பணிக்களுக்காக மதுரை மாநகருக்கு வருகை புரிந்துள்ள CRPF A/141BN மத்திய துணை ராணுவ படைப்பிரிவை சார்ந்த திரு ரியாஸ் அகமது என்கிற படை வீரருக்கு நேற்று திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மார்ச் 16 2026 மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ லோகநாதன் I P S., அவர்கள் நேரில் சென்று நலன் விசாரித்தார்.
மாநகர காவல் துணைஆணையர் வடக்கு அவர்கள் உடனிருந்தார்.




