Police Recruitment

மதுரையில் பத்து காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தர சான்று

மதுரையில் பத்து காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தர சான்று

உலகத் தர வாய்ந்த ஐஎஸ்ஓ சான்றிதழ் மற்றும் மத்திய அரசின் குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா வழங்கும் சான்றுகளை பெறுவதற்காக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே மதுரை மாநகரில் உள்ள 27 காவல் நிலையங்களில் விளக்கத்தூண், கீரைத்துறை , தெற்கு வாசல், ஜெய்ஹிந்த்புரம்,சுப்பிரமணியபுரம், எஸ் எஸ் காலனி, கூடல் புதூர், கே புதூர், மற்றும் அண்ணா நகர் ஆகிய 10 காவல் நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டு மேற்கண்ட சான்றிதழ்களை பெறுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
காவல் நிலையங்களில் உள்கட்ட அமைப்புகளை மேம்படுத்துவது, காவல் நிலையத்தையும் காவல் நிலையத்தின் சுற்றி உள்ள பகுதிகளையும்,
தூய்மையாக வைத்துக் கொள்வது,
வழக்கு கோப்புகளையும் மற்ற ஆவணங்களையும் எளிதாக எடுப்பதற்கு வழிவகை செய்வது, பொதுமக்கள் புகார் அளிக்க காவல் நிலையம் வந்து விசாரணை முடித்து மன அமைதியுடன் திரும்பிச் செல்வதற்கு ஏற்ற வகையில் பார்வையாளர் அறைகளை மாற்றி அமைத்தல்,
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளை துரித விசாரணை செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்வதுடன் மட்டுமல்லாமல் வழக்கினை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியும் எதிரிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தருவது மற்றும் அவ்வப்போது வரக்கூடிய அவசர அழைப்புகளுக்கு உடனடி தீர்வு வழங்குவது போன்றவை சான்றிதழ் வழங்குவதற்கு அடிப்படைத் தகுதிகள் ஆகும்.
அதன் அடிப்படையில் ஐ எஸ் ஓ Zed Assessor கவர்மெண்ட் ஆப் இந்தியா Q C I WASH Assessor கவர்மெண்ட் ஆப் இந்தியா ஆகியோர் தலைமையில் மேற்கண்ட 10 காவல் நிலையங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இன்று 15. 3. 2026 ஐஎஸ்ஓ சான்றிதழ் மற்றும் குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா Q C I சான்றிதழ் வழங்கப்பட்டது .

இதற்காக கடினமாக உழைத்த காவல்துணை ஆணையர்கள்,
காவல் உதவி ஆணையர்கள் ,
காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்களை மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள் .

Leave a Reply

Your email address will not be published.