மது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது, 120 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1730/- பறிமுதல்.
நேற்று மதுரை மாநகரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டதில் 20 நபர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 20 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 120 மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பணம் ரூ.1730/- ம் பறிமுதல் செய்யப்பட்டது.