நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் புதிதாக பொருத்தப்பட்ட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 28.01.2020 இன்று துவக்கி வைத்தார்.
28.01.2020 இன்று காலை, சென்னை பெருநகர காவல், S-4 நந்தம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் மவுண்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட 8 ANPR சிசிடிவி கேமராக்கள் உட்பட 121 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப., தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி,இ.கா.ப., நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் திரு.ஆர்.திருநாவுக்கரசு,இ.கா.ப., புனித தோமையர்மலை துணை ஆணையாளர் திரு.கே.பிரபாகர், உதவி ஆணையாளர், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.