கடலூர் மாவட்ட காவல்துறையினருக்கு அதி நவீன உடற்பயிற்சிக் கூடம் ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர் அவர்கள்
கடலூர் மாவட்ட காவல்துறையினரின் குடும்பங்கள் வைத்த கோரிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M. ஸ்ரீ அபிநவ் IPS., அவர்கள். கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் காவலர்களுக்கு உடற்பயிற்சி கூடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் திரு.V.அன்புச்செல்வன் IAS., அவர்கள் ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்து உடற்பயிற்சி கூடம் அமைத்து 27.01.2020ம் தேதி திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் திரு.M. ஸ்ரீ அபிநவ் IPS., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.பாண்டியன், திரு.மாணிக்கவேல், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருமதி.சாந்தி, திரு.சரவணன், தனிப்பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு) திரு.பால்சுதர், ஆயுதப்படை ஆய்வாளர் திரு.விஜயகுமார் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி திரு.சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.