தலைக்கவசம் அணிவது குறித்து பொற்றோர்களிடம் விழிப்புணர்வு
காஞ்சிபுரம் பி.3 தாலுகா காவல்துறையினர்
ஓரிக்கை பகுதியில் உள்ள பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் தலைக்கவசம் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசிய காஞ்சி தாலுக்கா துணை ஆய்வாளர் ராஜமாணிக்கம் உலகிலேயே விலை மதிப்பற்றது மனித உயிர் தான் அப்படிப்பட்ட மனித உயிர்களைநம்முடைய அலட்சியத்தினாலும், கவனக்குறைவினாலும் இழந்து கொண்டிருக்கிறோம் முக்கியமாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அதிகமாக விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது தான் தற்போதைய உண்மைநிலவரம்
வேகமாய் செல்வதை தவிர்க்கவேண்டும். சாலைகளில் செல்லும்போது கவனத்தை சிதறவிடக்குடாது
சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது நம்முடைய பாதுகாப்புக்காகவும்தான். ஆகையால், சாலை விதிகளை ஒவ்வொருவரும் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.
சாலை விதிகள் என்ன அவற்றை எப்படிச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள சின்னங் களுக்கு என்ன அர்த்தம் ஆகிய விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
போக்குவரத்துக் காவலர்சிக்னல் விளக்குகள் உள்ள இடங்களில் போக்கு வரத்துச் சின்னங்களின் கட்டளைகளான நிற்க வழிவிடு சின்னங்கள் இருப்பின், அந்த இடங்களில் நின்று, இருபக்கமும் பார்த்து எந்த வாகனமும் வரவில்லை என்பதை உறுதி செய்த பின்புதான் சாலையை கடக்க வேண்டும் பள்ளிக்கு நடந்து செல்பவர்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போதும் சாலையில் கவனமாக செல்ல வேண்டும். சைக்கிளில் செல்லும்போது வலது-இடது திசை பார்த்து கவனம் சிதறாமல் சைக்கிளை ஓட்டிச்செல்லவேண்டும்.
முன் செல்லும் வண்டியினை முந்திச் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி போன்றவைகளுக்கு தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும் என்றார்
இதை கவனித்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்
காஞ்சிபுரத்திலிருந்து
போலிஸ் இ நியூஸ்
செய்திகளுக்காக
ம.சசி
மாவட்ட நிருபர்