இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நினைவூட்டும் கவாத்து பயிற்சி நடைபெறுவது வழக்கம்.
அதே போன்று இந்த ஆண்டும் ஆயுதப்படை மைதானத்தில் கூட்டு கவாத்து பயிற்சி, கடந்த 20.01.2020 முதல் 05.02.2020 வரை நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடல்திறன், ஆயுதங்களை கையாள்வது, கலவர கூட்டங்களை தடுப்பது மற்றும் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் கடைசி நாளான இன்று 05.02.2020 ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ராஜராஜன், (பொறுப்பு) அவர்கள் கவாத்தை ஆய்வு செய்து, காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.