போலி பீடி தயாரித்தவர் கைது
திருப்பூர் அனுப்பர்பாளையம் சுற்றுவட்டார கடைகளுக்கு தங்கள் நிறுவன பெயர்கொண்ட பீடிகளை ஒரு சிலர் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக கோவை நூர்செட் பீடி மேலாளர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் திரு.ராஜன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.விசாரணையின் போது ஒரு சில கடைகளில் போலியான நூர்செட் பிடி இருப்பது தெரியவந்தது.பின்னர் அந்த கடைகளுக்கு சப்ளை செய்யும் நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பது தெரியவந்தது.ஆரோக்கியராஜ் கடந்த 2 மாதங்களாக போலியான பீடி விற்பனை தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து போலியான பீடிகளை விற்பனைக்காக வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.மேலும் அவரிடமிருந்து ரூபாய் 6,300 மதிப்புள்ள 21 பண்டல்கள் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணை நடத்திய போலீசாரை திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன் (இ கா ப) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள் .
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்