Police Department News

மதுரையில் போலி மது பாட்டில்கள் தயார்செய்தவர் கைது

மதுரை: 27.12.2017 D1 – தல்லாகுளம் ச&ஒ காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் திரு.அழகுமுத்து, தலைமை காவலர் (626) திரு.செந்தில் குமார், முதல் நிலை காவலர் (1204) திரு.ஸ்ரீமுருகன் ஆகியோர்களுடன் சரக ரோந்து பணியில் இருந்தபோது தபால்தந்திநகர், மிலிட்டரி கேண்டீன் அருகே உள்ள பெட்டிகடை அருகில் கட்டைப்பையுடன் நின்றிருந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அதில் 5 மது பாட்டில்கள் (750 ஆடு) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை செய்தபோது தனது பெயர் லிங்கனாண்டி (60) என தெரிவித்தார், மேலும் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் போலி மது பாட்டில்கள் தயார் செய்வதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள ஜீவா ஜெராக்ஸ் கடையின் உரிமையாளர் திருப்பதி ராஜா என்பரும் விலை உயர்ந்த மது பாட்டில் நிறுவனத்தின் லேபிள்களை தயார் செய்து மது பாட்டில்களில் ஒட்டி விற்பனை செய்து வருவதாக ஒப்புகொண்டார்.

மேலும் லிங்கனாண்டி வீட்டின் பின்புறம் ஒரு பிளாஸ்டிக் சாக்கு பையில் 50 மது பாட்டில்கள், இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரையும், திருப்பதி ராஜாவையும் கைது செய்து, ஏற்கனவே கட்டைப்பையில் வைத்திருந்த 5 மது பாட்டில்கள் சேர்த்து மொத்தம் 55 பாட்டில்கள், விலை உயர்ந்த மது பாட்டில் நிறுவனத்தின் லேபிள்கள் 10, பாண் மசாலா – 5 பண்டல்இ கூழ் லிப் – 1 பண்டல், கணேஷ் – 7 பண்டல், சைனி 3 பண்டல் மற்றும் ஜர்தா – 1 பண்டல் கைப்பற்றப்பட்டு, எதிரிகள் இருவரையும் இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.