மதுரை மாநகர், ஜெய்ஹிந்புரம் பகுதியில் பயங்கரமான கூட்டுக்கொள்ளை திட்டம் முறியடிக்கப்பட்டது
மதுரை மாநகர், ஜெய்ஹிந்புரம் B.6.காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்புரம் ஜீவா நகர் முதல் தெருவில் சந்தேகத்திற்குறிய சில நபர்களின் நடமாட்டம் இருப்பதாக B.6.காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஆய்வாளர் பாலமுருகன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்களுடன் ஜீவா நகர் முதல் தெருவிற்கு சென்றார் அங்கே சந்தேகப்படும்படி ஆறு நபர்கள் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சோலைஅழகுபுரத்தைச் சேர்ந்த சந்தானத்தின் மகன் சுரேஷ்(28), வில்லாபுரம்,TNHB காலனியைச் சேர்ந்த முருகன் மகன் சுனில்குமார்(21), ஜெய்ஹிந்புரத்தைச் சேர்ந்த ஆனந்த மகன் குட்டை அஜீத்குமார்(24), சோலை அழகு புரத்தைச் சேர்ந்த கனேசன் மகன் அய்யப்பன்(19) என தெரிய வந்தது.மேலும் அவர்களிடமிருந்து மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய பயங்கரமான ஆயுதங்களான கத்தி, அரிவாள் மற்றும் மிளகாய் பொடி போன்றவற்றை காவல் துறையினர் கைபற்றினர் மேலும் விசாரணையில் அவர்கள் அந்தப் பகுதியில் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததாக தெரிய வந்தது உடனே அவர்களை கைது செய்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 399ன்படி, வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்,
இதன்மூலம் அந்த பகுதியில் நடைபெறவிருந்த மாபெரும் கொள்ளைச் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது, பகுதி மக்கள் காவல் துறையை வெகுவாக பாராட்டினர்.
போலீஸ் இ நியூஸ் மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி