4 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது
_திருப்பூர் மாநகர பிச்சம்பாளையத்தை அடுத்த பூம்பாறை ஒயின்ஷாப் பின்புறம் சிலர் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் திரு.ராஜன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.விவேக்குமார் மற்றும் சக காவலர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒயின்ஷாப் பின்புறம் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவைச் சேர்ந்த ராஜு(35) ,கம்பம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(32) காங்கேயத்தை சேர்ந்த ஆனந்தபாபு(29) , சிவன்மலை சேர்ந்த முருகேசன்(31) என்பதும் தெரியவந்தது. அவர்கள் அந்தப் பகுதிகளில் தங்கி கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.மேலும் ஆந்திராவில் இருந்து அவிநாசி வழியாக கஞ்சா கடத்தி வந்து ஒட்டன்சத்திரம்,திருப்பூர் போன்ற பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சிறப்பாக செயல்பட்ட அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசாரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார் (IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன் (IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினர்.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்