பட்டபகலில் கத்தியைக் காட்டி மிரட்டி துணிக்கடையில் கொள்ளை.
24 மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்த காவல் துறையினர்
மதுரை மாநகர் செல்லூர் D.2, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான செல்லூர், சிவகாமி தெருவில் மீனாட்சி சுந்தரம் என்பவர் சூர்யா காட்டன் மென்ஸ் வேர் என்ற ஜவுளிக் கடை நடத்தி வருகிறார்..
09/06/2020 ந் தேதி மாலை சுமார் 4.30 மணியளவில் கைலி, சட்டை அணிந்த ஒருவர் மற்றும் பேண்ட் சட்டை அணிந்த ஒருவர் இருவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு கடைக்கு வந்து ரூபாய் 10,100/− மதிப்புள்ள ஜவுளிகள் எடுத்துக் கொண்டு பணம் தராமல், கத்தியை காண்பித்து மிரட்டி கொள்ளையடித்து சென்றனர்.இது தொடரபாக செல்லூர் D.2 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, உடனே குற்றவாளிகளை பிடிக்க மதுரை காவல் ஆணையர் உயர் திரு டேவிட்சன் தேவார்சிர்வாதம் அவர்களின் உத்தரவின் படி குற்ற பிரிவு துணை ஆணையர் திரு பழனிகுமார் அவர்களின் மேற்பார்வையில், காவல் உதவி ஆணையர் திரு சந்திரன், மற்றும் விசாரணை அதிகாரி செல்லூர் D2.காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் திரு நாகராஜன் அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் திரு மணபாலன், திரு ஶ்ரீதர் திரு சுந்தரேசன் மற்றும் தலைமை காவலர்கள் ஆகியோர் கொண்ட தனிப் படை அமைத்து குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் எதிரிகள், மருதுபாண்டி நகர், தமிழ்செல்வன் மகன் சூர்யா வயது 22,/20, கிருஷ்ணாபுரம் காலனி, சொக்கநாதபரம், முருகன் மகன் சந்தோஷ் வயது 20/20, ஆகியோர்களை கைது செய்து வழக்கு தொடர்பான சொத்துக்களை கைப்பற்றி , அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 392 வது பிரின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
போலீஸ் இ நியூஸ்
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி