Police Department News

மதுரை அருகே விராட்டிப்பத்தில், கத்தியை காண்பித்து மிரட்டி, ஆள் கடத்தல், அதிரடியாக மீட்ட காவல் துறை.

மதுரை அருகே விராட்டிப்பத்தில், கத்தியை காண்பித்து மிரட்டி, ஆள் கடத்தல், அதிரடியாக மீட்ட காவல் துறை.

மதுரை மாநகர், C.3. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான விராட்டிபத்து, பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ரெங்கநாதன், இவர் ரெயிவே ஒப்பந்ததாரராக இருந்தவர்.
இவர் கடந்த 11 தேதி வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் வெளியே சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை எனவே இவரது மனைவி நாகலக்ஷிமி தனது கணவர் செல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, மறு முனையில் பேசியயவர், இவரது கணவரை கடத்தி வைத்திருப்பதாகவும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளார்.இதனையடுத்து நாகலெக்ஷிமி SS காலனி C 3. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் வியாழக்கிழமை மதியம் இவரது வீட்டிற்கு பக்கமாக நடந்து செல்லும் போது மதியம் 3 மணியளவில் சில மர்ம நபர்கள் இவரை கத்தியை காண்பித்து மிரட்டி காரில் கடத்தியதாக தெரிந்தது. கடத்திய நபர்கள் கொடிக்குளம் பகுதியை சேர்ந்த பொண்ணுச்சாமி மகன் பூமிநாதன், வயது 40, வாடிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நாகமணி வயது 32, சமயநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ்குமார்,வயது 36 வாடிப்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் பழனிராஜ் வயது 24, வாடிப்பட்டியை சேர்ந்த கருப்பு மகன் வெற்றிகுமார் வயது 30 என தெரிய வந்தது
இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரியான SS காலனி C.3 காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திருமதி பிளவர் ஷீலா அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் மகேந்திரன் அவர்கள், இந்திய தண்டனைச் சட்டம் 364(A) யின்படி வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்ட நபர் ரெங்கநாதனை மீட்டு, குற்றவாளிகளை கைது செய்து விசாரித்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

போலீஸ் இ நியூஸ்
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.