பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை…!!
அரசு வேலை வாங்கி தருவதாக யாரேனும் தங்களிடம் கூறினால் அவர்களை முழுமையாக நம்பி உடனடியாக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதுபோன்று மோசடி செய்யும் நபர்கள் பற்றி தங்களுக்கு தகவல்கள் தெரியவந்தால் தயங்காமல் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு தமிழ்நாடு காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
திருவண்ணாமலை மாவட்டம்¸ துருகம் கிராமத்தை சேர்ந்த செல்வம் மற்றும் எஸ்.எம் நகரை சேர்ந்த சரவணராஜி என்பவரும் சேர்ந்து திருவண்ணாமலை மாவட்டம்¸ புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் காவல்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 2¸25¸000/- பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியது. விசாரணையில் இதேபோன்று 21 நபர்களிடம் காவல்துறையில் காவலர் பணி வாங்கித் தருவதாக சுமார் 30 லட்சம் பணத்தை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அவர்;களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து மூன்று கார்¸ 21 நபர்களின் அசல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன. இதுபோன்ற மோசடி நபர்கள் பற்றி தெரிந்தால் காவல்துறையில் உடனடியாக புகார் அளிக்குமாறு தமிழக காவல்துறை கேட்டுகொள்கிறது.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.