பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை..!!
கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள்…
கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு நீங்கள் செல்வதால் நிச்சயமாக உங்களுக்கு கொரோனா நோய் தொற்று வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது..
மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பல தெருக்களில் பரவி இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்து கொள்வது மிகவும் அவசியம்…
காய்கறி மற்றும் மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ளவும். தினந்தோறும் நீங்கள் கடைகளுக்கு செல்வதால் நோய் தொற்று எளிதாக தொற்றிக்கொள்ள அதிகமான வாய்ப்புகள் உள்ளது…
கூட்டம் அதிகமாக உள்ள கடைகள், காய்கறி சந்தைகளில் தான் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது…
மதுரை மாநகரில் உள்ள 20 காவல் நிலைய சரகங்களில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள், அனைத்தையும் தங்களது காவல் நிலைய சரகத்தின் எல்கைக்குள் உள்ள கடைகளில் மட்டும் பொருட்களை வாங்கிக் கொள்ளவும்.
மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், கொள்ளைநோய் தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்.