உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தேனி மாவட்ட காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா பயிற்சி தேனி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் காவல்துறையினரின் மனவலிமை மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனப் பயிற்சி, பயிற்றுவிக்கப்பட்டது.
மேலும் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா நோய் தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.