Police Department News

சாலை சீரமைப்பு பணியில் காவலர்கள்

சாலை சீரமைப்பு பணியில் காவலர்கள்

ஜூலை -23
திருப்பூர் மாநகரம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் பாதாள சாக்கடை உடன் கலந்த மழைநீர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் 15 வேலம்பாளையம் எல்லைக்குட்பட்ட சிறுபூலுவப்பட்டி என்ற இடத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு முதல் நிலை காவலர் முகரம் மற்றும் நாகராஜ் ஆகியோர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர் இச்செயலை செய்த காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன்(இ.கா.ப) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.க.சுரேஷ்குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.