திருப்பூர் மாநகர காவல் துறையினருடன் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு -2 குழுவினர் இன்று 21.07.2020 ஊரக காவல் துறையினருடன் இணைந்து காசிபாளையம் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகளிடம், அனைவரும் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது, குழந்தைகளையும், வயதானவர்களையும்வெளியில் அழைத்து வரக்கூடாது, தமிழக அரசு சொல்லும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கினார்கள். தலைக்கவசமும், முகக்கவசமும் உயிர் கவசம் என்று அறிவுறுத்தினார்கள். மேலும் *சமூக *இடைவெளியை பின்பற்ற குடைகளை* பயன்படுத்தவும் என ஊரக காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மீனாகுமாரி அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முதல் நிலை காவலர் திரு.ராஜ்கமல் அவர்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கினார். அலகு-2 குழுவினரின் அயராது விழிப்புணர்வினை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன்(இ.கா.ப) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.சுரேஷ் குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்