மதுரை திருமங்கலத்தில் மூதாட்டி எரித்து கொலை, மூதாட்டியின் குடும்பத்தினர் நான்கு பேர் கைது
மதுரை மாவட்டம், திருமங்கலம், PT ராஜன் சாலை அருகே குண்டாறு படுகையிலிருந்து, சென்ற 8 ந் தேதி சனி கிழமையன்று நன்பகல் நேரத்தில் துர் நாற்றம் கலந்த புகை குடியிருப்பு பகுதிகளுக்கு வரவே, பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர், அங்கு ஒரு உடல் தீயில் எரிந்து கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே அருகே உள்ள E1, நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த E1, நகர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது உடல் எரிந்து கொண்டு இருந்தது, உடனே அவர்கள் தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்தனர். 70 சதவீதம் உடல் எரிந்த நிலையில் உடலை கைப்பற்றி ஆய்வு செய்ததில் இறந்தவர் 60 வயதைக் கடந்தவர் என தெரிய வந்தது. 60 வயதை கடந்தவரை எதற்காக, யார் கொலை செய்திருப்பார்கள் என தீவிரமாக விசாரித்தனர், பட்டபகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த நிகழ்வு நடந்திருப்பதால் பொது மக்கள் மிகவும் அச்சமடைந்தனர்,
பொது மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் திருமங்கலம் நகராட்சி துணை கண்காணிப்பாளர் வினோதினி, தலைமையிலான மூன்று தனி குழுக்கள் அமைத்து, E1, காவல் நிலைய ஆய்வாளர் பரமேஸ்வரியும் விசாரணையை தீவிரப் படுத்தினர், மேலும் விசாரணையை துரிதப்படுத்தியதில் எரிந்த நிலையில் கிடைத்த உடல் விருதுநகரை சேர்ந்த 75 வயது மிக்க கருப்பாயி அம்மாள் என்பது தெரிய வந்தது கருப்பாயிஅம்மாவின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனவே கருப்பாயி அம்மாள் தனது இரண்டாவது மகள் பழனியம்மாளுடன் திருமங்கலம் பசும் பொன் நகரில் வசித்து வந்தார், பழனியம்மாளின் கணவரும் இறந்து விட்ட நிலையில், பழனியம்மாளின் மகன் காளிதாஸ், மகள் காளீஸ்வரி, கருப்பாயிஅம்மாளின் இரண்டாவது மருமகன் வசந்தக்குமார் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர், இந்த நிலையில் கருப்பாயிஅம்மாளின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கருப்பாயிஅம்மாளின் உடலில் இருந்து துர் நாற்றம் ஏற்பட்டது, இதன் காரணமாக குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலிசெய்ய வற்புறுத்தியுள்ளார்கள், இதன் காரணமாக திருநகர் பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு பார்த்தார்கள், அங்கேயும் இந்த பிரச்சனை வந்து விடக் கூடாது என்பதற்காக கருப்பாயிஅம்மாளை கொன்று விடுவதென தீர்மானித்து, முதல் நாள் இரவு பழனியம்மாள், காளீஸ்வரி, காளிதாஸ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கருப்பாயிஅம்மாளின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியும், களுத்தை நெரித்தும் கொலை செய்தனர், அதன் பின் உடலை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து டிரை சைக்கிள் மூலமாக குண்டாறு பகுதிக்கு எடுத்து சென்று பெட்ரோல் ஊற்றி எரித்ததாக காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.
கொலை செய்ததை நான்கு பேரும் ஒப்புக் கொண்டு கொடுத்த வாக்கு மூலத்தின்படி அவர்களை கைது செய்து நீதி மன்றத்தின் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
70 சதவீதம் எரிந்த உடலை வைத்து, 24 மணி நேரத்தில் கொலையாளிகளை கண்டுபிடித்த காவல் துறையினரின் திறமையை அனைவரும் பாராட்டினர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி