Police Department News

சுதந்திர தினத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு

சுதந்திர தினத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு

தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை ஆணையர் மதிப்பிற்குரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S அவர்கள் உத்தரவுபடி குரோம்பேட்டை போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.கிருஷ்ணகுமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் சத்தியநாராயணன் கீர்த்திவேல் அவர்கள் சுதந்திர தினத்தில் மக்களுக்கு பலவேறு நன்மையான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சுதந்திர தினத்தன்று தன்னுடைய ஊதியத்தில் பசியால் வாடும் சாலையில் இருக்கும் முதியோர்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்குகிறார். சானிடைசர் முககவசம் வழங்குகிறார்கள்.G.S.T குரோம்பேட்டை மேம்பாலத்தில் வாகனசோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் முதலில் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் பிறகு முககவசம் ஹெல்மெட் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்று மிகவும் அன்பாகவும் மரியாதையிகவும் பரிசோதனை பின் அனுமதிக்கின்றனர்.சட்டத்தை மீறும் வாகன ஓட்டிகளை வாகனங்களுக்கு அபராதம் விதிக்கிறார்.பெண்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உடற்பயிற்சி பற்றியும் நன்மையான செயல்களை செய்கின்றனர். இதுபோன்ற நன்மையான செயல்களில் ஈடுபடும் காவலர்கள் அவர்களுடைய குடும்பத்தினருக்கு செய்யமுடியவில்லை. காலில் வலி சரியான நேரத்தில் உணவு அருந்த முடியாமல் பல்வேறு இன்னல்கள் மத்தியில் பொதுமக்கள் சேவையை சேவையாக எண்ணாமல் தியாகமாக செய்து வருகின்றனர்.இப்படி பட்ட நன்மையை மட்டும் செய்யும குரோம்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.கிருஷ்ணகுமார் அவர்கள் மற்றும் காவலர்கள் சத்தியநாராயணன் கீர்த்திவேல் அவர்களும் எங்கள் குரோம்பேட்டை பகுதியில் கிடைத்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அப்பகுதி வாழ் மக்கள் மிகவும் பெருமிதம்கொள்கின்றனர்.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக தென்சென்னை மாவட்ட செய்தியாளர் T.பிரபு

Leave a Reply

Your email address will not be published.