Police Department News

மதுரை மாட்டுதாவணி பஸ் ஸ்டான்டில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவம், காவல் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் தடுக்கப்பட்டது.

மதுரை மாட்டுதாவணி பஸ் ஸ்டான்டில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவம், காவல் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் தடுக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், அண்ணாநகர் E3, காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. P.பூமிநாதன் அவர்களின் உத்தரவின்படி கடந்த 25 ம் தேதி சார்பு ஆய்வாளர் திரு. K.மணிமாறன் அவர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு ராஜு, தலைமை காவலர் 2318, திரு அழகுபாண்டி, தலைமை காவலர் 1928, திரு, மதன்குமார், மற்றும் முதல்நிலை காவலர் 2525, திரு அன்புவேல், ஆகியோருடன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர்.

அவர்கள் மாட்டுத்தாவணி பின் புறமுள்ள கருவேல முட்புதர் அருகே வந்த போது அந்த இடத்தில் சந்தேகப்படும்படி கையில், வாள், அரிவாள் மற்றும் கத்திகளுடன் 5 பேர் கூட்டமாக சுற்றி உட்கார்ந்திருந்தனர் அந்த 5 பேரின் அருகில் சென்று மறைந்து நின்று கவனிக்கும் போது அவர்கள் அனைவரும்
மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் வியாபாரிகள் அனைவரும், வியாபாரம் முடித்து, கலெக்ஷன் பணத்தை எடுத்து செல்லும் போது, அதை கொள்ளையடிக்க வேண்டும் என பேசி சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள்.
இதை கவனித்த காவலர்கள், அவர்களை வளைத்து பிடித்து அவர்கள் பெயர், விலாசம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக கூ றி குழப்பினர். அதன் பின் இறுதியாக சரியான பெயர், விலாசம் கூறினர்.

1)கீரைத்துறையை சேர்ந்த வழிவிட்டான் மகன் பழனிச்சாமி என்ற பழனி வயது 21/2020.

2)கே.புதூர் பகுதியை சேர்ந்த கனேசன் மகன் தினேஷ்குமார் வயது 18/2020,

3) ஒத்தகடையை சேர்ந்த ரவி மகன் ராகுல் வயது 21/2020,

4) சிம்மக்கல் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் ஆகாஷ் வயது 21/2020,

5) கீழ அண்ணாதோப்பு பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் மகன் பரமேஸ்வரன் வயது 21/2020,

என்று கூறினர்,மேலும் அவர்கள் கூறுகையில் நாங்கள் அனைவரும் கூட்டாளிகள் என்றும், தண்ணியடிக்கவும் ஜாலியாக செலவு செய்யவும் பணம் தேவைப்படுவதால், பூ மார்கெட்டில் வியாபாரிகள், வியாபாரம் முடித்து கலெக்ஷன் பணத்தோடு வரும் போது கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்தோம் எனக் கூறினர் மேலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்து குற்றம் நடைபெறாமல் தடுக்கும் எண்ணத்தோடு, 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை கைப்பற்றிம், அவர்கள் மீது IPC 399 வது பிரிவின்படி வழக்கு பதிவு செய்து, நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.