Police Department News

கால்நடையை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள்

கால்நடையை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள்

மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை ஆணையர் மகேஷ்குமார்அகர்வால் I.P.S அவர்கள் உத்தரவுபடி ஞாயிறு முழு ஊரடங்கை தொடர்ந்து O.M.R சாலையில் தடுப்பு வேலியை அமைத்து கொண்டிருக்கும்போது பசுமாடு துரைப்பாக்கம் சிக்னல் அருகில் அடிப்பட்டு எழந்திருக்கமுடியாமல் இருந்த நிலையியை கேள்விப்பட்ட ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் அந்த பசுமாட்டை காப்பாற்ற முதலில் தண்ணீர் கொடுத்து பின்னர் இயந்திரம் பயன்படுத்தி சாலையில் இருந்து தூக்கி சாலை ஓரமாக படுக்கவைத்து பசுமாட்டின் உயிரை காப்பாற்றினார்.அதுமட்டுமின்றி குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரியாக சமன் செய்து விபத்து ஏற்படாமல் பொதுமக்களின் உயிரை காப்பாற்றுகிறார். முழு ஊரடங்கை பாதுகாக்கும் வகையில் சரியானபடி தடுப்பு வேலிகளை அமைத்துள்ளார்.O.M.R சாலைகளில் மின்விளக்குகள் சரியான படி இயங்குகிறதா என்றும் சிக்னல் சரியான படி இயங்குகிறதா என்றும் PATROL வாகனத்தின் மூலம் சரியாக கண்காணிக்கபடுகிறது. சாலையில் பசியோடு இருக்கும் முதியோர்களுக்கு தன்னுடைய ஊதியத்தில் உணவுகளை வழங்குகிறார்.இப்படி பொதுமக்களுக்காக சேவையாக எண்ணாமல் இரவுபகல் பாராமல் தியாகமாக செய்து வருகிறார் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள். இவர் மிகவும் அன்பாகவும் கனிவாகவும் நடந்து கொள்கிறார் என்று அப்பகுதியில் செல்லும் மக்கள் கூறுகின்றனர். இவர் போக்குவரத்து காவல்துறையினரிடையே உதாரணமாக திகழ்கிறார். போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக T.பிரபு & ஹரிஹரன் தென்சென்னை மாவட்ட செய்தியாளர்கள்

Leave a Reply

Your email address will not be published.