தூத்துக்குடி, தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 கிலோ கஞ்சா கடத்திய 3 நபர்கள் கைது
தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் அவர்கள் அதிக கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் பல் வேறு தனிப்படைகள் அமைத்து தீவிரப்படுத்தியுள்ளார்.
இதன் விளைவாக கடந்த இரண்டு மாதங்களில் ஆங்காங்கே கஞ்சா, சரஸ், மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் அதற்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தும் பல குற்றவாளிகளை கைது செய்தும், பலரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தும் , தூத்துக்குடி மாவட்டத்தில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் திரு கனேஷ் அவர்களின் மேற்பார்வையில், தாளமுத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி அவர்களின் தலைமையில், சார்பு ஆய்வாளர் திரு மகாராஜன் அவர்கள், மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் கடந்த 10 ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி KVK சாமி நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி தருவைக்குளம் ரோடு விவேகானந்தன் நகரை சேர்ந்த மகாராஜன் மகன் சோலையப்பன் வயது 20/2020, மற்றும் தூத்துக்குடி புதிய முனியசாமிபுரத்தை சேர்ந்த சங்கர் மகன் ராஜா வயது 19, என்பதும் தெரிந்தது. இவர்களிம் தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த விஜய் மனைவி லதா வயது 31, என்பவர் பணம் கொடுத்து திண்டுக்கல்லிலிருந்து கஞ்சா வாங்கி வர சொன்னார் என்பதும் தெரிய வந்தது.
அதன்படி, சோலையப்பன், ராஜா, ஆகியோர் திண்டுக்கல் சென்று கஞ்சா வாங்கி பேரூந்தில் கடத்தி வந்தது தெரிந்தது. இதன் அடிப்படையில் சோலையப்பன், ராஜா, லதா ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து கடத்தி வந்த 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
மேற்படி அதிரடி நடவடிக்கை எடுத்த தனிப்படையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.