மதுரை, SS காலனி பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவல் துறை
மதுரை மாநகர், SS காலனி, எல்லீஸ் நகர், பைபாஸ் ரோடு 70 அடி சாலையில் மராமத்து பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி செய்யப்படாமலும், சாலையில் போடப்பட்ட கற்கள் அப்புறப்படுத்தப்படாமலும், வாகனங்கள் போக்கு வரத்திற்கு மிகவும் சிரமமாக இருந்து வந்த நிலையில் இன்று காலையில் நமது செய்தியாளர் திரு. செளகத்அலி அவர்கள் அந்த சாலை வழியாக செல்லும் போது, SS காலனி போக்கு வரத்து சார்பு ஆய்வாளர் கருப்பையா அவர்கள், அந்த பகுதியில் அதாவது பைபாஸ் ரோடு 70 அடி சாலையில் ஆட்களை வைத்து சாலையில் உள்ள பள்ளங்களையும் மேடுகளையும் மணல் போட்டு சரி செய்து கொண்டிருந்தார், அவர் அருகில் சென்று விசாரித்த போது அவர் கூறியதாவது.
போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கப்பாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, SS காலனி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களை, அந்தந்த பகுதி ஒப்பந்ததாரர்களை கொண்டு சீரமைத்து வருகிறோம்,
இதன் மூலம் சாலைகளில் வாகன விபத்துக்கள் தடுக்கப்படும், என்றார்.
காவலர்களின் இந்த சேவை மனப்பான்மையுடன் கூடிய பணியை பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.