கிணற்றில் தவறி விழுந்த நபரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தேவர் குளம் காவல் துறையினர்
திருநெல்வேலி மாவட்டம், ராஜபாளையம், மலையடிப்பட்டி, பகுதியை சேர்ந்த காளிமுத்து வயது 20/2020, மற்றும் அவர்களது நண்பர்கள் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரியில் ஒவ்வொரு ஊராக சென்று சுத்தம் செய்வது வழக்கம். இதன் அடிப்படையில் இன்று தேவர் குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியன லொச்சிப்பட்டி, கிராமத்திற்கு வந்த இவர்கள் தனித்தனியாக பிரிந்து வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகித்து வந்தனர், அப்போது காளிமுத்து என்பவர் அருகில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்து கிணற்றின் உரிமையாளர் கிணற்றை வந்து பார்வையிட்ட போது யாரோ கிணற்றில் தவறி விழுந்து கிடப்பதாக தேவர் குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து உடனடியாக உதவி ஆய்வாளர் திரு. முனீஸ் அவர்கள் தலைமையில் தனிப்பிரிவு காவலர் வள்ளி மணவாளன், காவலர்கள் வேல்பாண்டி, தங்கப்பாண்டி, கற்புதப்பாண்டி, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது காளிமுத்து உயிருடன் இருப்பது தெரியவந்தது.
பின்பு உடனடியாக சங்கரன் கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக வந்த மீட்பு துறையினர், காவல் துறையினர், உதவியுடன் காளிமுத்துவை மீட்டனர்,
கிணற்றில் தவறி விழுந்த நபரை காப்பாற்றிய தேவர் குளம் காவல் துறையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
தக்க நேரத்தில் வந்து உதவி புரிந்த காவல் துறையினரையும் தீயணைப்பு படை வீரர்களையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.