Police Department News

சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்த பல கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது.!!!

சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்த பல கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது.!!!

கைது செய்த சாயர்புரம் காவல் நிலைய போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருநெல்வேலி தச்சநல்லூர், மேலத்தெருவைச் சேர்ந்த மலையரசன் மகன் (1) மணிகண்டன் (வயது 32), சேரனமகாதேவி, மேலக்கூனியூர், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணி மகன் (2) தங்கச்செல்வன் (வயது 26), முறப்பநாடு பக்கப்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் (3) சின்னத்தம்பி (வயது 23), திருநெல்வேலி தாழையூத்து கட்டுடையார் குடியிருப்பு, நியூகாலணியைச் சேர்ந்த பெருமாள் மகன் (4) மகாராஜன் (வயது 31), பாளையங்கோட்டை, கீழநத்தம் வெள்ளக்கோவில், சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் (5) சண்முகராஜன் (வயது 23), திருநெல்வேலி தாழையூத்து, கட்டுடையார்குடியிருப்பு, மேலபுத்தனேரி, காந்திநகரைச் சேர்ந்த (6) சின்னத்தம்பி என்ற ராசுக்குட்டி (வயது 19) ஆகிய 6 பேரும் ஒரு ஆட்டோவில் நேற்று மாலை சாயர்புரம் பகுதிக்கு வந்து, அங்குள்ள கடையில் மாமூல் கேட்டு வீச்சருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாமூல் கேட்டு ரவுடித்தனம் செய்து, பொதுமக்களையும் அச்சுறுத்தினர். இந்த தகவலறிந்து சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகப்பெருமாள், திரு. அருள் சாம்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்களை பிடிக்க முற்படும் போது போலீசாரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களுடன் போராடி அவர்களை கைது செய்து, அவர்கள் வைத்திருந்த வீச்சருவாள், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் முற்றும் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி வழக்குபதிவு செய்து, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேற்படி ரவுடிகள் பல கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, 1வது எதிரியான மணிகண்டன் என்பவர் மீது திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகளும், ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கும், ஆத்தூரில் 1 கொலை வழக்கும் ஆக மொத்தம் 5 கொலை வழக்குகளும், தச்சநல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 வழக்குகளும், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு1ம், ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை காவல் நிலையத்தில் கொலை முயற்சி 1ம், திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் 1 கொலை முயற்சி வழக்கும், ஆத்தூரில் 1 கொலை முயற்சி வழக்கும், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் 1 கொலை முயற்சி வழக்கும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 1 கொலை முயற்சி வழக்கும், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கு 1ம், ஆக மொத்தம் 20 வழக்குகள் உள்ளன. மேலும் இவர் 3 முறை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது எதிரியான சின்னத்தம்பிக்கு முறப்பநாடு காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீதி கொலை முயற்சியில் ஈடுபட்ட 1 வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 1 வழக்கும், அதே போன்று தச்சநல்லூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் ஆக மொத்தம் 5 வழக்குகள் உள்ளன.

6வது எதிரியான ராசுக்குட்டி என்ற சின்னத்தம்பிக்கு முறப்பநாடு காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குளும் உள்ளனர். மற்ற எதிரிகளான தங்கச்செல்வன், மகாராஜன், சண்முகராஜன் ஆகியோர் மேற்படி எதிரிகளுக்கு நெருங்கிய கூட்டாளிகளாவார்கள். கைது செய்த பிரபல ரவுடிகள் 6 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை மிரட்டல் என பல மாவட்டங்களில் 27 வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சாயர்புரம் காவல் நிலையம் விரைந்து சென்று பார்வையிட்டு, தங்கள் உயிரை பணையம் வைத்து போராடி கைது செய்து, அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்து, அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்த ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, உதவி ஆய்வாளர் திரு. முருகப்பெருமாள் மற்றும் சாயர்புரம் காவல் நிலைய போலீசாரை பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.